துளசி இனத்தை சேர்ந்த திருநீற்றுப்பச்சிலை செடியிலிருந்து கிடைக்ககூடிய விதைகள் தான் சப்ஜா விதைகள் (Basil seeds) என்றழைக்கப்படுகிறது. இந்த விதைகளை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தாலே நன்றாக ஊறி உப்பி வருவதை பார்க்க முடியும்.
பார்ப்பதற்கு எள் போன்று சிறிய வடிவில் இருந்தாலும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, ஒமேகா 3 அமிலம் எனும் நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இதனுடைய மருத்துவ குணங்களுக்காக, சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய பயன்களை நீங்களும் தெரிந்து கொண்டால், தினசரி நீங்களும் சம்ஜா விதைகளை எடுத்துக்கொள்வீர்கள்.
6 நன்மைகள்:
- உடல் சூட்டை தனிக்கும்: விதை வகை உணவுகளில், உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய ஆற்றலை கொண்ட ஒரே விதை சப்ஜா விதைகள் தான். இதை தண்ணீரில் ஊறவைக்கும் போது, விதையின் வெளிப்புற தோல் தண்ணீரை உறிஞ்சி ஜெல் பதத்திற்கு மாறும். இவை, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவிகிறது. அதிக உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள், தினசரி காலை வெறும் வயிற்றில் இளநீருடன் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை சேர்த்து குடித்து வரலாம்.
- உடல் எடையை குறைக்கும்: டயட்டரி ஃபைபர் எனும் நார்ச்சத்து சப்ஜா விதைகளில் அடங்கியுள்ளதால், வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு, பசியையும் கட்டுக்குள் வைக்கும். இதனால், இடை இடையே சாப்பிடும் பழக்கம் தவிர்க்கப்படுவதால் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, ஒரு ஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.
- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்: ஊறவைத்த சப்ஜா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனை சாப்பிடுவதால், உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் வேகமாக சேருவதை தடுக்கும். இதனால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வது தடுக்கப்படும்.
- மலச்சிக்கல் நீங்கும்: நாம் சாப்பிடும் உணவில் போதிய நார்ச்சத்து இல்லாதது தான் மலச்சிக்கல் பிரச்சனைக்கு காரணியாக இருக்கிறது. இந்த விதைகளில், இருக்கும் நீர்ச்சத்து மலம் இறுக்கமடைவதை தடுத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், குடலில், மலக்கழிவுகள் தேங்குவது தடுக்கப்படும்.
- இருதய ஆரோக்கியம்: இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகமாக இருப்பதே மாரடைப்பு மற்றும் இருதய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், தினசரி சப்ஜா விதைகளை எடுத்து வரும் போது மாரடைப்பு மற்றும் இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வராது.
- புற்றுநோயை தடுக்கும்: உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்காமல் தடுக்கும் ஆற்றல் சப்ஜா விதைகளுக்கு இருக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் நடத்திய ஆய்வில், சப்ஜா விதைகளின் எண்ணெய் புற்றுநோய் கட்டிகளை குறைப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், தினசரி சப்ஜா விதைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது
இதையும் படிங்க: |