அனைத்து தரப்பு மக்களுக்கும் வாங்கி சாப்பிடும் வகையில் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்த பலருக்கும், கொய்யா இலைகளின் மகத்துவ நன்மைகள் தெரியாமல் போய்விட்டது.
புரதம், வைட்டமின் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஏரளமான ஆன்டி ஆக்ஸிடண்டுகளால் நிரம்பியுள்ளது தான் கொய்யா இலைகள். இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ள கொய்ய இலைகளை எப்படி பயன்படுத்துவது? இதனால் குணமாகும் நோய்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்.
நீரிழிவு நோய் குணமாகும்: சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள்,2 டம்ளர் தண்ணீரில் மூன்று கொய்யா இலைகளை சேர்த்து கொதிக்கவைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் அளவிற்கு வற்றியதும் வடிகட்டி தினசரி காலை குடித்து வர இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படும். கூடுதலாக, இலையில் இருக்கக்கூடிய சத்துக்கள் கணையத்தில் இருக்கக்கூடிய செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும். இதனால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
உடல் எடை குறையும்: அதிக உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் 3 கொழுந்து கொய்யா இலைகளை அரைத்து, அந்த சாற்றுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வர, உடலில் தேங்கியிருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். தொடர்ந்து, 4 முதல் 5 வாரங்கள் இதனை சாப்பிட்டு வர உடல் எடையில் கணிசமான மாற்றம் ஏற்படுவதை பார்க்கமுடியும்.
செரிமான கோளாறு குணமாகும்:வயிற்று வலி, எரிச்சல், உப்புசம், வயிற்று போக்கு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. கொய்யா இலைகளை கொத்திக்க வைத்து, மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக குடித்து வந்தால், இந்த பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பதோடு, செரிமான நொதிகளை சுரக்கவும் உதவுகிறது.
தொண்டை புண், பல் வலி குணமாகும்: வாயில் ஏற்படக்கூடிய பல் வலி, தொண்டை மற்றும் வாய் புண், பல் ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தளிர் கொய்யா இலைகளை மென்று சாற்றை முழுங்க வேண்டும். இலையில் இருக்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள்,வாயில் இருக்கக்கூடிய புண்களை எளிதில் குணமாக்கும்.