ஐதராபாத்:சைன் வி பயோசயின்ஸ் பிரைவேட் லிமிடெட், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலம் புட்டபார்த்தி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து AMRX software என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர்.
இதன் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் சிறுநீர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள நோய் பாதிப்புகளுக்கு இனி சீறுநீர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தின் துணை பேராசிரியர் டாக்டர் பிரதீப், நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மருத்துவர்களிடன் தெரிவித்தால் போதும், சரியான உள்ளீடுகளை மென்பொருளில் தகவலாக தெரிவிக்கும் போது, அது சம்பந்தபட்டவருக்கு என்ன பாதிப்பு என்பதை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும் என கூறினார்.
இந்த மென்பொருள் மூலம் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் சிறுநீர் பரிசோதனை மேற்கொண்டு 48 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நிமிடங்களில் நோய் பாதிப்பு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் முதற்கட்டமாக 8 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் வழங்கும் தரவுகளின் கொண்டு மென்பொருள் சரியான தகவலை தந்ததாகவும் துணை பேராசிரியர் பிரதீப் கூறினார்.