தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

வெயில் காலத்திற்கான 7 ஹைட்ரேஷன் டிரிங்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க.! - 7 Hydration Drinks for Summer - 7 HYDRATION DRINKS FOR SUMMER

கோடைக் காலத்தில் திடமான உணவுகளை விட நீரேற்றம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என, உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக ஜூஸ் வகைகளைக் குடிக்க வேண்டுமாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 11:00 PM IST

Updated : Apr 8, 2024, 4:23 PM IST

சென்னை: கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில் உணவு, உடை, பாதுகாப்பு விஷயங்கள் என அனைத்தும் கடந்து நீரேற்றம் நிறைந்த உணவு மிக முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் கோடைக்கு ஏற்ற குளுமை தரும்பானங்களை கீழே பார்க்கலாம்.

உடல் சூட்டைத் தணித்து, நீரேற்றத்தை ஊக்குவிக்கும் ஏழு வகையான இயற்கை பானங்கள்.

1. மாங்காய் ஜூஸ்

2. ரோஸ் சர்பத்

3.மோர்

4. ஜல்ஜீரா குடிநீர்

5. லசி

6. தர்பூசணி ஜூஸ்

இவை ஒவ்வொன்றின் செய்முறை விளக்கம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது..

1. மாங்காய் ஜூஸ் (Aam panna)

இரண்டு பச்சை மாங்காய்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அதைக் குக்கர் அல்லது பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும், பிறகு அந்த மாங்காய்களை எடுத்து அதில் இருக்கும் தோலை நீக்கி விடுங்கள். பிறகு அதற்கு உள்ளே இருக்கும் மாங்காயின் சதைப் பகுதியை நன்றாக மைத்து எடுங்கள். அதில் உங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு சிறிதளவு சீரகம் எடுத்து வருத்து அதை அந்த தண்ணீரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் குடியுங்கள். இந்த பச்சை மாங்காய் ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் உடல் சூடு தனியும்.

2. ரோஸ் சம்பத்

பெரிய டம்ளரில் 2 டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். பிறகு அந்த தண்ணீரை அடுப்பில் இருந்து கீழே இறக்கி அதில், காய்ந்த சிவப்பு ரோஜா இதழ்களைப் போட்டு மூடி வையுங்கள். சுமார் 6 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். பிறகு அந்த தண்ணீரை எடுத்து வடி கட்டி குடியுங்கள்.

3. மோர்

நல்ல கெட்டியான தயிர் எடுத்து தேவைக்கு ஏற்ப நன்றாகத் தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் வருத்தச் சீரகம், உப்பு, மல்லி இலை மற்றும் கருவேப்பிலை, இஞ்சி தட்டியது, அனைத்தும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இந்த மோரை காலை மற்றும் மதியம் உணவுக்குப் பின் குடியுங்கள். உடல் குளிர்ச்சி அடைவதுடன் மிகவும் திருப்தியான உணர்வு கிடைக்கும்.

4. ஜல்சீரா குடிநீர்

வருத்தச் சீரகம், மல்லி பொடி, மிளகு உள்ளிட்டவைகள் அனைத்தும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து ஒரு கிளாசில் போட்டுக்கொள்ளுங்கள் அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள். அதை அப்படியே குடித்துவிடுங்கள். இந்த குடி நீர் வெயில் காலத்தில் ஏற்படும் உணவு செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். ஜல்ஜீரா பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

5. சப்ஜா எலுமிச்சை ஜூஸ்

சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊர வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு, அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து, சப்ஜா விதைகளையும் போட்டுக் குடியுங்கள். உடலுக்கு மிகுந்த குளுமை தரும். வெயிலில் உங்களை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்வது மட்டும் இன்றி தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.

6. லஸ்ஸி

கட்டியான தயிர் எடுத்து அளவாகத் தண்ணீர் ஊற்றி, தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துத் தேவைப்பட்டால் எலைக்காய், தேன் போன்றவற்றைச் சேர்க்கலாம். பிறகு அதை மிக்சியில் அடித்து அப்படியே குடியுங்கள். அமிர்தம் போல இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும். உடல் சூட்டையும் குறைக்கும்.

7. தர்பூசணி ஜூஸ் மற்றும் தர்பூசணி லஸ்ஸி

தர்பூசணியில் இருந்து எடுக்கும் ஜூஸ் உடன் தயிர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து அப்படியே குடித்தால் அது லசி. தர்பூசணி ஜூஸை மட்டும் குடித்தாலும் போதும் அது உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சியைத் தரும்.

இயற்கையின் படைப்பில் கோடைக் காலத்தில்தான் தர்பூசணி உள்ளிட்ட ஏராளமான பழ வகைகள் உண்பதற்குத் தயாராகி விளைந்து நிற்கின்றன. அவை முறையாக உட்கொண்டாலே போதும், காலநிலைக்கு ஏற்றார்போல் உடலைத் தகவமைத்து வாழ முடியும்.

இதையும் படிங்க:அப்பப்பா என்னா வெயிலு... எக்சைஸ் பண்ணலாமா? கூடாதா? - Do You Exercise In Summer Or Not

Last Updated : Apr 8, 2024, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details