சென்னை: சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர், காத்து கருப்பு கலை. இவர் தற்போது 'ரத்த பூமி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. அந்த பூஜையின்போது, இப்படத்தின் இயக்குநர் காத்து கருப்பு கலை, தான் அடுத்த விஜய் என்று பேசியிருக்கிறார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
அப்படத்தின் இயக்குநர் பேசும்போது, “அடுத்த தளபதி இவர்தான். ஆக்ஷன் ஹீரோவாக வரக்கூடிய எல்லா தகுதியும் இவருக்குத் தான் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இந்த வீடியோவை பகிர்ந்து, ‘நமக்கு பயங்கர போட்டி கொடுப்பாங்க போலயே’ என்று இயக்குநர் சிஎஸ் அமுதனை டேக் செய்துள்ளார்.