சென்னை:இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் நாளை (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் முன்பதிவு தொடங்கவில்லை. சென்னையில் ஒருசில திரையரங்குகளில் மட்டுமே புக்கிங் தொடங்கியுள்ளது.
அதிலும், கமலா திரையரங்கில் பெரிய திரையில் விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இப்படம் தற்போது வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதால், நாளையும் மூன்று காட்சிகள் ஃபுல்லாகி உள்ளது. இதனால் கில்லி திரைப்படம் பெரிய திரையில் போடப்பட்டுள்ளது. விஷாலின் ரத்னம் படம் சிறிய திரையில் போடப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் நடிகர் விஷால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பற்றி பேசியிருந்தார். இந்த நிலையில், நடிகர் விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூர் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிதம்பரம், மீனாட்சி ஆகியோரை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், “நான் பணம் பாக்கி வைத்துள்ளதாக ஒருவர் கடிதம் அளித்துள்ளார். அவர் உங்கள் சங்கத்தின் உறுப்பினர் கூட இல்லை. அந்த கடிதத்தில் நான் பணம் தரவேண்டும் என்ற ஆதாரமும், முகாந்திரமும் இல்லை. அதனை வைத்துக்கொண்டு எனது படத்தை வெளியிடாமல் என்னை சுத்தலில் விடுகிறீர்கள். எனக்கும், அந்த நபருக்கும் சம்பந்தம் கிடையாது. நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.