தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"பாலியல் தொல்லையா.. புகாரளியுங்கள் நிச்சயம் நடவடிக்கை"- நடிகர் நாசர்! - Actor Nassar - ACTOR NASSAR

விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும் ஏதேனும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்று நடிகர் நாசர் தெரிவித்தார்.

நடிகர் நாசர்
நடிகர் நாசர் (X Page)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 8, 2024, 2:28 PM IST

Updated : Sep 8, 2024, 3:51 PM IST

சென்னை: நடிகர் சங்க நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், "சிறப்பாக இந்த பொதுக் குழுவை நாங்கள் நடத்தினோம் என்பதை விட நீங்கள் நடத்தினீர்கள் என்பது தான் உண்மை. ஒவ்வொரு பொதுக் குழு நடத்தும் போதும் எனக்கு ஒரு பதற்றம் இருக்கும், இந்த இளைஞர்கள் எனக்கு ஊக்கம் அளிப்பார்கள்.

தம்பி கார்த்தி, பூச்சி முருகனுக்கு என் மனதார சிறப்பு நன்றிகள். சர்வாதிகார குணத்துடன் நல்ல நிர்வாகியாக பூச்சி முருகன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு சினிமா நடிகர்கள், நாடக கலைஞர்கள் என்ற பாகுபாடு இல்லை, எந்த நேரத்தில் நீங்கள் அழைத்தால் பதில் அளிப்பார். அவரால் பல உறுப்பினர்கள் பயன் அடைந்துள்ளார்கள்.

பூச்சி முருகன் சென்னையில் இருந்த ஒவ்வொரு நாளும் சங்கத்திற்கு ஒதுக்கி உள்ளார். கருணாஸ் குரலுக்கு நன்றி. விஷால் நீ விதைத்தாய் நாங்கள் எல்லாரும் முளைத்து உள்ளோம். முத்துக்காளை நடிகர் என்பதற்கு அல்ல, நல்ல மனிதர் என்பதற்காக அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

பலரது குற்றச்சாட்டு முக்கிய நடிகர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தான். இங்கு வராத நடிகர்கள் தான் நமக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். நடிகர்கள் ரஜினி , கமல் வருகிறார்களோ, இல்லையோ இங்கு நடப்பதை அவர்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.

இன்று நடந்த நிகழ்வில் முத்தாய்பாய் இருந்த பணம் யோகி பாபு அளித்தது. அவர் இன்று வர இயலவில்லை. பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் எல்லா துறையிலும் உள்ளது. திரைப்படத் துறையில் உள்ளவர்கள் பற்றி பேசினால் பலருக்குத் தெரியும் என்று மிக கீழ்த்தரமாக பயன்படுத்துகிறார்கள்.

இனிமேல் நாங்கள் எங்கள் உரிமையை கேட்போம். நாடகம் சினிமா துறையின் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பு முக்கியம். ஏற்கனவே விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்சனைகளை தீர்த்து வைத்தோம். ஏதேனும் தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்று ரோகிணியும் நானும் உறுதி அளிக்கிறோம்.

நாங்கள் இம்முறை கட்டிடத்தை முடிப்போம். வரும் சோதனைகளில் எங்கள் வலிமைபடுத்துவதாக, உறுதிப்படுத்துவதாக நினைக்கிறோம். உங்கள் நம்பிக்கைக்கு நன்றி" என்று நடிகர் நாசர் பேசினார்.

இதையும் படிங்க:"கடனை அடைக்க கலை நிகழ்ச்சி.. அதில் ரஜினி, கமல்"- நடிகர் கார்த்தி சொல்வது உண்மையா? - Actor Karthi

Last Updated : Sep 8, 2024, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details