சென்னை:நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மகாராஜா (Maharaja). இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி, தமிழ் மற்றுமின்றி பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் மகாராஜா படத்தை Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. சீனா வெளியீட்டில், Home Screen Entertainment மற்றும் Nine Knots Entertainment மிக முக்கிய பங்காற்றி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.
இதுகுறித்து, அலெக்ஸி வூ, Yi Shi Films கூறியதாவது, "மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம் சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி" என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், "மகாராஜா எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். அந்த வகையில், மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது."