சென்னை: ’விடுதலை 2’ படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ’விடுதலை 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது. விடுதலை முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கனிமவளத்தை திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி இயக்கம் அமைத்து போராடுகிறார். கிட்டதட்ட மக்களை காக்கும் மாவீரன் போல வாழும் விஜய் சேதுபதி அரசிடம் பிடிபட்டாரா, மற்றும் அவரின் சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து ’விடுதலை 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விடுதலை 2 வெளியானது.
இதனைத்தொடர்ந்து விடுதலை 2 கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வணிக ரீதியாக சுமாரான வசூலை பெற்றது. வெற்றிமாறன் இயக்கிய படங்களில் விடுதலை 2 சற்று சொதப்பியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பிரபல சினிமா வர்த்தக இனையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய அளவில் விடுதலை 2 திரைப்படம் 35.80 கோடி வசூல் செய்துள்ளது.