தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகும் 'கோலி சோடா - ரைசிங்' வெப் சீரியஸ் டீசர் வெளியீடு! - Goli soda rising - GOLI SODA RISING

Goli soda rising teaser: விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோலி சோடா - ரைசிங்' வெப் சீரியஸ் டீசர் வெளியாகியுள்ளது.

கோலி சோடா ரைசிங் போஸ்டர்
கோலி சோடா ரைசிங் போஸ்டர் (Credits - Disney Hotstar Productions)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 27, 2024, 4:38 PM IST

Updated : Aug 27, 2024, 4:51 PM IST

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் 'சட்னி சாம்பார்' மற்றும் 'பர்பெக்ட் ஹஸ்பென்ட்' (Perfect husband) ஆகிய வெப் சீரிஸ்களை வெளியிட்டுள்ளது. ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியான 'சட்னி சாம்பார்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - ரைசிங்' (Goli soda - rising) வெப் சீரியஸின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் மில்டனின் கோலி சோடா படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து கோலி சோடா 2 வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கோலி சோடா ரைசிங் இணைய தொடர் தற்போது உருவாகி உள்ளது.

தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த வெப் சீரியஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதயராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன், மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வெப் சீரியஸின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் SN அருண்கிரி இசையமைத்துள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் KL படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த வெப் சீரியஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தனுஷ் இயக்கிய ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ முதல் சிங்கிள் எப்போது? - Nilavukku en mel ennadi kobam

Last Updated : Aug 27, 2024, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details