தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திருச்சியில் கோட் பட ரீலிஸ்; ரசிகர்கள் கூறுவது என்ன? - GOAT Movie Celebration - GOAT MOVIE CELEBRATION

GOAT Movie Celebration: திருச்சியில் கோட் திரைப்படம் வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் எந்த வித ஆர்பாட்டமின்றி உற்சாகத்தோடு திரையரங்குக்குள் சென்று படம் பார்த்து வருகின்றனர்.

கோட் பட கொண்டாட்டம்
கோட் பட கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 2:46 PM IST

திருச்சி:வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

விஜய் ரசிகர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள், படம் சமூக வலைதளங்களில் படம் மிக பிரம்மாண்டமாக உள்ளது, விறுவிறுப்புக்கு சிறிதளவு கூட பஞ்சமில்லை என தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் இன்று விஜய் நடித்துள்ள தி - கோட் படம் காலை 9 மணி அளவில் திரையிடப்பட்டது. நடிகர் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலிலேயே திரையரங்கம் முன்பு அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.

நடிகர் விஜய் படம் திரையிடப்பட்டாலே தமிழ்நாடு மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் எப்போது விஜய் படம் திரையிடபட்டாலும், ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பு பட்டாசு வெடிப்பது, நடனம் ஆடுவது, இனிப்புகள் வழங்குவது, பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடிகர் விஜய்க்கு பேனர் வைப்பது, பால் அபிஷேகம் பண்ணுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

திருச்சியில் நடிகர் விஜய் படம் வெளியிடப்பட்டாலே திருவிழா போன்று திரையரங்குகள் காட்சி அளிக்கும். ஆனால் இன்று எந்த ஆரவாரமும் அளப்பரியும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் அமைதியான முறையில் திரையரங்குக்குள் சென்று படம் பார்த்து வருகின்றனர்.

Join ETV Bharat WhatsApp channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நெல்லை: கோட் பட ரிலீஸை செண்டை மேளத்துடன் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! - GOAT Movie Celebration

ABOUT THE AUTHOR

...view details