ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் குறித்து விஜய் தேவரகொண்டா, வரும் மாதங்களில் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் செய்து கொள்ள எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.
இவ்வாறு வரும் வதந்திகள் தனக்கு மன உளைச்சலை தருவதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார். ஊடகங்கள் தனது திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் இவ்வாறு வெளியாகும் வதந்திகள் தனது திரை வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
திருமண வதந்தி குறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில், "எனக்கு பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் என எதுவும் நடக்காது. ஊடகங்கள் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமணம் என வதந்தி கிளப்பி வருகின்றனர்" என கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முதலில் 2018ஆம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்தனர். இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒன்றாக பலமுறை வெளியில் சென்று வந்தனர். ஆனால் இருவரும் தற்போது வரை திருமணம் குறித்த தகவலை மறுத்து வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூருடன் அனிமல் பட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் கேர்ள் ஃபிரண்ட் என்ற தெலுங்கு படத்திலும், ரெயின்போ என்ற தமிழ், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் விஜய் தேவர்கொண்டா சமீபத்தில் சமந்தாவுடன் குஷி படத்தில் நடித்தார். தற்போது ஃபேமிலி ஸ்டார் மற்றும் மிருனால் தாகூருடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க:"விஜயகாந்த் இறந்ததற்கு வடிவேலு வீட்டில் இருந்து அழுதிருக்கலாம்" - நடிகர் சரத்குமார்