தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கோலாகலமாக நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா; தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் படங்கள் என்ன? - CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL

22nd Chennai international film festival: சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள படங்கள்
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள படங்கள் (Credits - Film Posters)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 10:27 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட அமைப்பு இணைந்து நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

பல்வேறு மொழி சினிமாக்களை சென்னையில் காண மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. மேலும் இது சினிமா ரசிகர்களின் ரசனையை இன்னும் மேம்படுத்தி கொள்ள வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 50 நாடுகளிலிருந்து 123 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

வெனிஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்படுகிறது. இந்திய படங்கள் indian panorama, world cinema competition, tamil feature film list ஆகிய பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழில் இருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் Indian panorama பிரிவில் தேர்வாகியுள்ளது. இப்படங்கள் சென்னை பிவிஆர் சத்யம் (PVR Satyam) திரையரங்கம், மற்றும் பிவிஆர் ஐநாக்ஸ் (PVR Inox) ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இதையும் படிங்க: என்ன கண்ணா ரெடியா?... சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு வரிசையாக வெளியாகும் அப்டேட்கள்!

Tamil Feature films பிரிவில் தேவாகியுள்ள படங்கள்

  • அமரன்
  • போட்
  • புஜ்ஜி அட் அனுப்பட்டி (Bujji at anupatti)
  • செவப்பி
  • ஜமா
  • கொட்டுக்காளி
  • கோழிப்பண்ணை செல்லத்துரை
  • லப்பர் பந்து
  • மகாராஜா
  • மெய்யழகன்
  • நந்தன்
  • ரசவாதி
  • தங்கலான்
  • வாழை
  • வெப்பம் குளிர் மழை
  • வேட்டையன்
  • அயலி
  • டிமாண்டி காலனி 2
  • கருடன்
  • ஹாட்ஸ்பாட் (Hotspot)
  • லாக்டவுன் (Lockdown)
  • நீல நிற சூரியன்
  • பார்க்கிங்
  • டீன்ஸ்
  • வல்லவன் வகுத்ததடா

இது மட்டுமின்றி மலையாளத்தில் இருந்து நல்ல வரவேற்பை பெற்ற படங்களான ’ஆடுஜீவிதம்’, ’ஏஆர்எம்’, ’பிரம்மயுகம்’, ’கிஷ்கிந்தா காண்டம்’ ஆகிய படங்களும் தெலுங்கில் இருந்து நானி நடித்த ஹாய் நானா படமும் திரையிடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details