சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'கோட்' (Greatest of all time). இது நடிகர் விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஏற்கனவே கோட் படத்தின் இரண்டு பாடல்கள் 'விசில் போடு', 'சின்ன சின்ன கண்கள்' வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஆக.2) மாலை 7 மணிக்கு மூன்றாவது பாடலின் ப்ரோமோ வெளியாகும் எனவும், நாளை மாலை 6 மணிக்கு முழு பாடல் வெளியாகும் என தெரிவித்து பாடலின் பொஸ்டரை வெளியிட்டுள்ளார்.