சென்னை :தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் உருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ்லில் நல்ல வசூல் சாதனை படைத்தது. ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்தது.
சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி, கட்சியின் மாநில மாநாடு அக்.27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று இருக்கின்றன. சமீபத்தில், மாநாட்டிற்கான பூமி பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"தவெக மாநாடு குறித்து கேள்வி - ஆவேசமடைந்த எஸ்ஏ.சந்திரசேகர்!