தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த கோட் டீம்.. என்னவா இருக்கும்? - GOAT CREW VISIT VIJAYAKANTH HOME - GOAT CREW VISIT VIJAYAKANTH HOME

Vijay met Vijayakanth family: தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் மறைந்த நடிகர் விஜயகாந்த் குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.

பிரேமலதாவை சந்தித்த விஜய்
பிரேமலதாவைச் சந்தித்த விஜய் (Credits - VP X Page)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 19, 2024, 9:08 PM IST

சென்னை:ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தி கோட் (The Greatest of all time). யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் தோன்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய் உள்ளிட்டோர் இன்று (ஆக.19) பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்புக்கு முன்னதாக, விஜய் தனது கட்சி தொடர்பான கொடியினை பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தார். இந்த கொடியானது மஞ்சள் நிறத்திலும், நடுவில் விஜய் உருவமுமாக உள்ளது. மேலும், தவெக கட்சிக் கொடி அறிமுக விழாவானது வருகிற 22ஆம் தேதி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பனையூரில் பறந்த தமிழக வெற்றிக் கழகம் கொடி.. ஒத்திகை பார்த்த விஜய்! - tvk Flag hoisted

ABOUT THE AUTHOR

...view details