விழுப்புரம்:தேர்தல் வரும் காலங்களில் எல்லாம் நடிகர்களின் அரசியல் பிரவேசம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. முன்னால் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி, எஸ் எஸ் ஆர், விஜயகாந்த் காலம் தொட்டு இன்று விஜய் வரை அது நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் 'நடிகன் அரசியல்வாதி ஆகிறான், அரசியல்வாதி நடிகன் ஆகிறான் வியப்பதற்கு ஒன்றும் இல்லை, இரண்டுக்கும் அடிப்படை நடிப்பு' என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகளோடு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார் தாடி பாலாஜி.
ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை இங்கே அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் என்ன யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அப்படித்தான் சொல்லுகிறது அந்த போஸ்ட். சமீபகாலமாகத் தாடி பாலாஜி நடவடிக்கைகள் மக்களின் நலன் சார்ந்து இருப்பதைக் காணமுடிகிறது.
யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களைச் சென்று பார்ப்பது அவர்களுக்கு ஆதரவாக நிற்பது அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என்கிற அடிப்படையில் தாடி பாலாஜி செயல்படுவது ஒரு அரசியல்வாதி போல அவரை வெளிப்படுத்துகிறது என்ற அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.