தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜெய்பீம் நடிகர் இயக்கத்தில் உருவாகும் கார்த்தி 29! - KARTHI 29 - KARTHI 29

டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 29வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

கார்த்தி 29 அறிவிப்பு போஸ்டர்
கார்த்தி 29 அறிவிப்பு போஸ்டர் (Credits - DreamWarriorPictures X Page)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 15, 2024, 10:50 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் தற்போது 96 படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அரவிந்த் சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், இன்று (செப்.15) கார்த்தியின் 29வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்க இருப்பதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு போஸ்டரில் கருப்பு வெள்ளை வண்ணத்தில் கப்பல் ஒன்று நிற்பது போல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் கேரக்டர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படம் அறிவிப்பு போஸ்டர் வெளியானது! - Raghava Lawrence 25th film

நடிகர் கார்த்தி தனது 26 மற்றும் 27வது படத்தில் நடித்து வருகிறார். 26வது படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு வா வாத்தியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அதேபோல், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் தமிழ், ஜெய் பீம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details