தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தவெக மாநாடு; விஜய்க்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாழ்த்து! - TVK MAANAADU

TVK maanaadu: இன்று தவெக மாநாட்டை முன்னிட்டு விஜய்க்கு தமிழ் திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தவெக மாநாட்டை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் வாழ்த்து
தவெக மாநாட்டை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் வாழ்த்து (Credits - ETV Bharat Tamil Nadu, Raaj Kamal Films International X account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 27, 2024, 4:42 PM IST

சென்னை: பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ’தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி தொடங்கினார். தமிழ் சினிமாத்துறையில் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் உச்சத்தில் இருக்கும் விஜய் சினிமாவில் இருந்து விடை பெற்று அரசியலில் நுழைந்துள்ளார். எச்.வினோத் இயக்கும் ’தளபதி 69’ திரைப்படமே தான் நடிக்கும் கடைசி திரைப்படம் என விஜய் அறிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும், விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற ஏகோபித்த ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த மாதம் தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்த விஜய், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்ட முறையில் நடத்துகிறார். அதற்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற தமிழ் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில், “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில், “தவெக மாநாட்டிற்காக தளபதி விஜய் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள், சினிமாவில் தாங்கள் காட்டிய அதே ஆர்வத்தை அரசியலில் காட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாஸ் உதயநிதி, நண்பர் விஜய்யின் புதிய பாதை... சூர்யாவின் கலகலப்பான பேச்சு!

நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் வரவு எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும், நல்வாழ்த்துக்கள் விஜய் சார்” என கூறியுள்ளார். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு தவெக மாநாட்டிற்காக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details