தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா... அதிர்ச்சியில் கதறி அழுத அன்ஷிதா! - BIGG BOSS 8 TAMIL

Bigg boss 8 tamil: பிக்பாஸ் சீசன் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், கடந்த வார எலிமினேஷனில் சுனிதா வெளியேறியுள்ளார்.

விஜய் சேதுபதி, சுனிதா புகைப்படம்
விஜய் சேதுபதி, சுனிதா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, Sunita Gogoi Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 11:36 AM IST

சென்னை: பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், கடந்த வாரம் 'போதும் இதுக்கு மேல இங்க இடமில்ல' என்கிற அளவுக்கு 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அந்த போட்டியாளர்களில் ஓரளவு சுவாரஸ்யம் கூட்டுவதாக மஞ்சரி மட்டுமே தெரிந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ’கடந்து வந்த பாதை’ டாஸ்கில் முத்துக்குமரன் கதை கூறிய விதம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.

மேலும் சமூக வலைதளங்களிலும் முத்துக்குமரனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. புதிதாக வீட்டிற்குள் வந்தவர்களால் என்ன மாற்றம் என ஏற்கனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப, அதற்கு பழைய போட்டியாளர்கள் அனைவரும் ஒரு மாற்றமும் இல்லை என கூறினர். அதுவும் பழைய போட்டியாளர்கள் ஒட்டு மொத்த பேரும் ரியா மற்றும் வர்ஷினியை வேஸ்ட் போட்டியாளர்களாக கருதினர்.

அதேபோல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர்களிடம் அனுபவம் பற்றி விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ’சத்யா ஒண்ணுமே பண்ணல’, ’அருண் உள்ள நல்லா விளையாடுறாரு’, ’சவுந்தர்யாவை பிடிக்க ஆரம்பிச்சிருக்கு’ என பல்வேறு விதமான கருத்துக்கள் வந்தது. இதனைத்தொடர்ந்து மொட்டை கடுதாசி பற்றி விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். அதில் ரானவிற்கு வந்த கடுதாசியில் “I think ur cute, but i dont like u” என யார் எழுதியது என்பது பெரிய அளவில் பேசப்பட்டது. இறுதியில் ரியா தான் ஜாலியாக எழுதியதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் சத்யா சவுந்தர்யாவை “uneducated lady” என கூறியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு விஜய் சேதுபதியிடம் அவர் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதே போல் விஷால், சவுந்தர்யா பற்றி பேசியதற்கும் விஜய் சேதுபதி எச்சரிக்கை விடுத்தார். "நீங்கள் தமிழ்நாடே உற்று நோக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறீர்கள், டீக்கடையில் பேசவில்லை. பார்த்து பேசுங்கள்" என கண்டித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்து ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்டனர். கடைசியாக லிஸ்டில் ஆனந்தி, சுனிதா ஆகியோர் இருந்தனர். இதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்தது.

இதையும் படிங்க: "எதார்த்தமான நடிப்பையும், அன்பையும் இழந்து விட்டேன்" - டெல்லி கணேஷ் மறைவுக்கு வடிவேலு இரங்கல்!

சுனிதா இந்த சீசனில் ஒரு பலமான போட்டியாளராக இருந்த நிலையில் வெளியேறியுள்ளார். அன்ஷிதா தனது பார்ட்னர் வெளியேறிய சோகத்தில் கதறி அழுதார். சுனிதா அன்ஷிதாவிடம் ’இனி உன்னை எவரும் குருப்பிஸம் என விமர்சனம் செய்ய மாட்டார்கள் தனியா நல்லா விளையாடு’ என அட்வைஸ் செய்து விட்டு சென்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details