சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லீ' (good bad ugly) ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில், குட் பேட் அக்லீ படப்பிடிப்பின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் வேகமெடுத்துள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கும், குட் பேட் அக்லீ பொங்கல் பண்டிகைக்கும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித், திடீரென நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார்.
மேலும், அஜித் சென்னை விமான நிலையத்தில் இருந்து திரும்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி, தான் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளது போன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.