ஹைதராபாத்: பொல்லாதவன், குத்து, சிங்கம் புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் ரம்யா என்ற பெயரில் சினிமாவில் அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் பிரபல நடிகையான திவ்யா ஸ்பந்தனாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பிரபவ் சவுத்ரியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
இதனைத்தொடர்ந்து நமது ஈடிவி செய்தியாளர், திவ்யாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, அது பொய்யான தகவல் என தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, 'திவ்யாவுக்கு நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் என்பது வதந்தி என்பது தெரியவந்தது. திவ்யா குறித்து வெளியான தகவலில், அவருக்கு தொழிலதிபர் பிரபவ் சவுத்ரியுடன் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்பட்டது. அது முற்றிலும் பொய்யான தகவல்' என தெரிவித்தனர்.