தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அட்லீயின் ஆக்‌ஷன் படத்தில் இணையும் இரு பெரும் நட்சத்திரங்கள்! - salman kamal haasan with atlee - SALMAN KAMAL HAASAN WITH ATLEE

Salman Kamal Haasan with Atlee: இயக்குநர் அட்லீ இயக்கும் ஆக்‌ஷன் படத்தில் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் கான், அட்லீ, கமல்ஹாசன்
சல்மான் கான், அட்லீ, கமல்ஹாசன் (Credits - IANS, @ikamalhaasan X account)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 4:27 PM IST

ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது இந்திய அளவில் பெரிய இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. இயக்குநர் ஷங்கர் என்ற பிரமாண்ட பாசறையில் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி மூலம் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கினார். அந்தப் படங்களும் வசூலில் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஷாருக்கானிடம் இருந்து அழைப்பு வர, அவரை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். ஜவான் திரைப்படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லீ நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்குவதாக பேசப்பட்டது.

இதனிடையே, சல்மான் கானிடம் இயக்குநர் அட்லீ இரண்டு ஹீரோ கொண்ட ஆக்‌ஷன் கதையைக் கூறியதாகவும், அது சல்மான் கானுக்கு பிடித்துப்போக, அட்லீயிடம் கதையை மேம்படுத்தக் கூறியதாகவும் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் கமல்ஹாசனும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், எவரும் நினைத்துக்கூட பார்க்காத இந்த பிரமாண்ட கூட்டணி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

அட்லீ இயக்கும் மெகா ஆக்‌ஷன் படத்தில் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் ப்ரீ புரோடக்‌ஷன் (Pre Production) பணிகள் துவங்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் கான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிகந்தர் (sikander) என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் (Thug life) படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் இரு பிரமாண்ட நடிகர்களை அட்லீ இயக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லையா?.. ஜீவாவுக்கு சின்மயி கேள்வி! - chinmayi questions actor jeeva

ABOUT THE AUTHOR

...view details