தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரஜினிகாந்த் உடன் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்.. கூலி சர்ப்ரைஸ் அப்டேட்! - soubin shahir joins coolie movie - SOUBIN SHAHIR JOINS COOLIE MOVIE

Soubin Shahir joins coolie movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 'கூலி' படத்தில் நடிகர் சவுபின் ஷஹீர் இணைந்துள்ளார்.

கூலி படத்தில் நடிக்கும் சவுபின் ஷஹீர்
கூலி படத்தில் நடிக்கும் சவுபின் ஷஹீர் (Credits - @sunpictures X account)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 6:27 PM IST

சென்னை:சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்தின் அறிவிப்பிற்கான ப்ரோமோ வெளியானது முதல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கூலி படத்தின் ப்ரோமோவில் இடம்பெற்ற டிஸ்கோ என்ற பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. அந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிகிறது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மேலும் பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் சவுபின் ஷஹீர் (Soubin Shahir) கூலி படத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. அவர் 'தயல்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சவுபின் ஷஹீர் கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ள ’வேட்டையன்’ படத்தில் ஃபகத் ஃபாசில் ரஜினியுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினிகாந்த் படத்தில் சவுபின் ஷஹீர் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வசூல்ராஜா MBBS நடிகர் மீது பாலியல் புகார்.. திணறும் மலையாளத் திரையுலகம்! - Hema committee report

ABOUT THE AUTHOR

...view details