சென்னை: உலக அளவில் சினிமாத்துறையில் மிகவும் பெருமைமிக்க விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது வெல்லப் போகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2008ஆம் ஆண்டு slumdog millionaire படத்திற்காக வென்றார். அதனைத்தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கடந்த ஆண்டு இசையமைப்பாளர் கீராவணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் வென்றனர்.
இந்நிலையில் இந்த வருடம் ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில், ’laapataa ladies’ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆஸ்கர் விருதுக்கு தமிழ் திரைத்துறை சார்பில் இந்த ஆண்டு 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் மகாராஜா, வாழை, ஜமா, கொட்டுக்காளி, தங்கலான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
மகாராஜா: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி, சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜுன் மாதம் வெளியான திரைப்படம் 'மகாராஜா' இப்படம் வெளியானது முதல் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் மகாராஜா திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் நெஃட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.