தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

69வது பிலிம்பேர் விருதுகள்; வடிவேலு முதல் சிவகார்த்திகேயன் வரை.. முழு விவரம்! - 69th Filmfare Awards nominations - 69TH FILMFARE AWARDS NOMINATIONS

69th Filmfare Awards nominations: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கான 68வது பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பட்டியல் வெளியான நிலையில், 69வது பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

மாவீரன், பொன்னியின் செல்வன் திரைப்பட போஸ்டர்
மாவீரன், பொன்னியின் செல்வன் திரைப்பட போஸ்டர் (Credits - @Siva_Kartikeyan, @trishtrashers X account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 6:13 PM IST

ஹைதராபாத்:இந்திய சினிமாத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 68வது பிலிம்பேர் விருது வென்றவர்கள் பட்டியல் வெளியானது. இதில் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், தனுஷ், மணிரத்னம், ரவிவர்மன் உள்ளிட்ட பலர் பிலிம்பேர் விருதுகளை வென்றனர்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 69வது பிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட சினிமா கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல் பின்வருமாறு;

சிறந்த திரைப்படம்

  • அயோத்தி
  • சித்தா
  • மாமன்னன்
  • பொன்னியின் செல்வன் பாகம் - 2
  • விடுதலை பாகம் - 1

சிறந்த இயக்குநர்

  • மடோன் அஷ்வின் (மாவீரன்)
  • மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • மாரி செல்வராஜ் (மாமன்னன்)
  • எஸ்.யூ.அருண்குமார் (சித்தா)
  • வெற்றி மாறன் (விடுதலை பாகம் 1)

சிறந்த நடிகர் (ஆண்)

  • சித்தார்த் (சித்தா)
  • சிவகார்த்திகேயன் (மாவீரன்)
  • சூரி (விடுதலை பாகம் 1)
  • வடிவேலு (மாமன்னன்)
  • விக்ரம் (பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த நடிகர் (பெண்)

  • ஐஷ்வர்யா ராய் பச்சன் (பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • ஐஷ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா)
  • அபர்ணா தாஸ் (டாடா)
  • பவானிஸ்ரீ (விடுதலை பாகம் 1)
  • நிமிஷா சஜயன் (சித்தா)
  • ஷ்ரத்தா ஸ்ரீநாத் (இறுகப்பற்று)
  • த்ரிஷா (பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த துணை நடிகர் (ஆண்)

  • ஃபகத் ஃபாசில் (மாமன்னன்)
  • எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
  • விநாயகன் (ஜெயிலர்)
  • யோகி பாபு (மாவீரன்)

சிறந்த துணை நடிகர் (பெண்)

  • அஞ்சலி நாயர் (சித்தா)
  • ரெய்ச்சா ரபேக்கா (குட் நைட்)
  • ராமா (பார்க்கிங்)
  • சரிதா (மாவீரன்)
  • சுபத்ரா (பொம்மை நாயகி)

சிறந்த இசையமைப்பாளர்

  • சித்தா (திபு நீநன் தாமஸ்)
  • ஜெயிலர் (அனிருத் ரவிசந்தர்)
  • லியோ (அனிருத் ரவிசந்தர்)
  • பொன்னியின் செல்வன் பாகம் 2 (ஏ.ஆர்.ரஹ்மான்)
  • வாத்தி (ஜீ.வி. பிரகாஷ்)
  • விடுதலை பாகம் 1 (இளையராஜா)

சிறந்த பாடலாசிரியர்

  • இளங்கோ கிருஷ்ணன் (அக நக - பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • இளங்கோ கிருஷ்ணன் (வீரா ராஜ வீரா பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • கிருத்திகா நெல்சன் (ஒரு வேழம் - நித்தம் ஒரு வானம்)
  • கு.கார்த்திக் (நிரா - டக்கர்)
  • சுகா (ஒன்னோடு நடந்தா - விடுதலை பாகம் 1)

சிறந்த பின்னணி பாடகர்

  • அனிருத் ரவிசந்தர் (பேடாஸ் - லியோ)
  • அனிருத் ரவிசந்தர் (ஹுகும் - ஜெயிலர்)
  • ஹரிசரண் (சின்னஞ்சிறு நிலவே - பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • சியன் ரோல்டன் (நான் காலி - குட் நைட்)
  • சித் ஸ்ரீராம், கௌதம் வாசுதேவ் மேனன் (நிரா - டக்கர்)
  • விஜய் யேசுதாஸ் (நெஞ்சமே நெஞ்சமே - மாமன்னன்)

சிறந்த பின்னணி பாடகி

  • கே.எஸ்.சித்ரா, ஹரினி (வீரா ராஜா வீரா - பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • கார்த்திக் வைத்யநாதன் (கண்கள் ஏதோ - சித்தா)
  • ஷக்திஸ்ரீ கோபாலன் ( அக நக - பொன்னியின் செல்வன் பாகம் 2)
  • ஷக்திஸ்ரீ கோபாலன் (நெஞ்சமே நெஞ்சமே - மாமன்னன்)
  • ஷில்பா ராவ் (காவாலா - ஜெயிலர்)

இதையும் படிங்க:Amaran Diwali Release: தீபாவளி கொண்டாட்டத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயனின் அமரன்! - AMARAN RELEASED ON OCT 31

ABOUT THE AUTHOR

...view details