தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Amaran Diwali Release: தீபாவளி கொண்டாட்டத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயனின் அமரன்! - AMARAN RELEASED ON OCT 31 - AMARAN RELEASED ON OCT 31

Amaran in Diwali Race: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் அக்.31-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமரன் போஸ்டர்கள்
அமரன் போஸ்டர்கள் (Credits - Raaj Kamal films Internation X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 5:14 PM IST

Updated : Jul 17, 2024, 6:01 PM IST

சென்னை:இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்தது.

இந்நிலையில், இன்று (ஜூலை 17) இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அமரன் திரைப்படம் வரும் அக்.31-ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:சைமா விருதுகள் 2024 பரிந்துரைப் பட்டியல்: ஜெயிலர் திரைப்படம் 11 பிரிவுகளில் தேர்வு! - SIIMA Awards 2024 Nomination

Last Updated : Jul 17, 2024, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details