தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'டான்' இயக்குநர் சிபி சக்கரவர்த்தி திருமண விழா.. நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து! - Don director cibi chakravarthy - DON DIRECTOR CIBI CHAKRAVARTHY

Don director cibi chakravarthy marriage: டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி திருமண நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சிபி சக்கரவர்த்தி திருமண விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்
சிபி சக்கரவர்த்தி திருமண விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 12:08 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மாபெரும் வரவேற்பைப் பெற்ற டான் (Don) திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதல் படமே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த சிபி சக்கரவர்த்தி பிரபல இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ’டான்’ திரைப்படம் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைத்ததால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.

அனிருத் இசையில் டான் பாடல்களும் இளைஞர்களை கவர்ந்தது. இந்நிலையில் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கும், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் பெரியோர்களால் நிச்சியிக்கபட்ட திருமணம் நடைபெற்றது. ஈரோடு ஆர்.என்.புதூரில் செப்டம்பர் 4ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நேற்று திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ் குமரன், எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் கலை, தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண், முனீஷ்காந்த், பிக்பாஸ் ராஜு, இயக்குநர் விக்னேஷ் ராஜா, இயக்குர் விஷால் வெங்கட், பால சரவணன், காளி வெங்கட், மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வரும் நிலையில் அதனைத்தொடர்ந்து நடிக்கும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்த விஷயத்தில் ஷாருக்கானுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தளபதி விஜய் தான்! - Income Tax

ABOUT THE AUTHOR

...view details