தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”துப்பாக்கி கணமாத்தான் இருக்கும் நாம்தான் சரியா ஹேண்டில் பண்ணனும்” - 'அமரன்' விழாவில் சிவகார்த்திகேயன் மாஸ் பேச்சு! - sivakarthikeyan thuppakki issue - SIVAKARTHIKEYAN THUPPAKKI ISSUE

அமரன் பட அறிமுக விழாவில், 'துப்பாக்கி கணம் எப்படி இருக்கு' என்று சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளினி கேள்வி எழுப்புவார். அதற்கு சிவகார்த்திகேயன் 'துப்பாக்கி கணமாத்தான் இருக்கும் நாம்தான் சரியா ஹேண்டில் பண்ண வேண்டும்' என்று‌ பதில் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தி கோட் பட போஸ்டர், சிவகார்த்திகேயன்
தி கோட் பட போஸ்டர், சிவகார்த்திகேயன் (Credits - Raaj Kamal films international X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 9:04 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி புரோடக்‌ஷன்ஸ் இனைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படத்தின் கதை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக, நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :"துப்பாக்கிய புடிங்க சிவா"... வெங்கட் பிரபு வசனத்தை மாற்றிய விஜய்!... காரணம் என்ன? - Sivakarthikeyan cameo in GOAT

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்படத்தில் 'சிவகார்த்திகேயனை பார்த்து துப்பாக்கியை புடிங்க என்று விஜய் வசனம் பேசியிருப்பார். அதற்கு சிவகார்த்திகேயன் நீங்கள் இத விட முக்கியமான வேலையா போறீங்க நான் இத பார்த்துக்கிறேன்' என பதில் கூறுவார். இந்த டயலாக் மூலம் நடிகர் விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் அந்த இடத்தை நிரப்பப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் இந்த டயலாக் பேசு பொருளானது.

இந்நிலையில், அமரன் படம் அடுத்த மாதம் தீபாவளி அன்று திரைக்கு வர இருப்பதால் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதில், நிகழ்ச்சியின் தொகுப்பாளினி சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கணம் எப்படி இருக்கு என்று கேட்பார். அதற்கு சிவகார்த்திகேயன் துப்பாக்கி கணமாத்தான் இருக்கும் நாம்தான் சரியா ஹேண்டில் பண்ண வேண்டும் என்று‌ தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details