ஐதராபாத்: தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒவ்வொரு வருடமும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா (SIIMA ) விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, வருகிற செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது.
இதில் 2023ஆம் ஆண்டு, ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த படங்கள் தேர்வு செய்து, SIIMA விருதுகள் வழங்கப்படுகிறது. சைமா 2024 விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம், நடிகர் நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான தசரா, மலையாளத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 2018 ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன.
குறிப்பாக தமிழில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் 11 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தெலுங்கில் தசரா படம் 11 பிரிவுகளிலும், நானி நடிப்பில் வெளியான மற்றொரு படமான ஹாய் நான்னா பத்து பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுளள்து. மலையாளத்தில், ஜோதிகா - மம்மூட்டி நடித்த காதல் தி கோர், கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான காட்டேரா ஆகிய படங்கள் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
பரிந்துரை செய்யப்பட்ட படங்களுக்கு ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடித்தி சிறந்த படங்கள், நட்சத்திரங்கள் ஆகியோர் தேர்தெடுக்கப்பட உள்ளனர்.
சிறந்த திரைப்படம் - தமிழ்
ஜெயிலர்
சிம்மம்
மாமன்னன்