தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி! - siddharth aditi rao - SIDDHARTH ADITI RAO

Siddharth Aditi Rao: நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த் அதிதி
திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த் அதிதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 7:29 PM IST

ஹைதராபாத்: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவிற்கு திருமணம் நடைபெற்றதாக கடந்த 2 நாட்களாக செய்தி பரவி வந்த நிலையில், அதிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு தெலுங்கானா மாநிலத்தில் வர்னாபதி ஸ்ரீரங்கப்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகசுவாமி கோயிலில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, சித்தார்த் மற்றும் அதிதி ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளனர்.

அதிதி சித்தார்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “he said yes! E.N.G.A.G.E.D” என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில், சித்தார்த் “she said yes” என பதிவிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு சினிமாத்துறை சேர்ந்த பல நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர், கடந்த 2021இல் வெளியான மகா சமுத்திரம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த போது காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களது காதலை ரகசியமாக வைத்துக் கொண்ட நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு சித்தார்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் அதிதியை partner என பதிவிட்டிருந்தார்.

இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதுமட்டுமின்றி, பிப்ரவரி 2023-இல் இருவரும் நடனமாடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனிடையே அதிதி ராவ் நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடித்துள்ள ஹீராமந்தி திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல், சித்தார்த் நடித்து வெளியான சித்தா, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க:’தலைவர் 171’ டைட்டில் டீசர் எப்போது? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்! - Thalaivar 171 Title Teaser

ABOUT THE AUTHOR

...view details