தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்?... 'கேம் சேஞ்சர்' விமர்சனம்! - GAME CHANGER REVIEW

Game changer Online review: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஆன்லைனில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கேம் சேஞ்சர் போஸ்டர்ஸ்
கேம் சேஞ்சர் போஸ்டர்ஸ் (Photo: Film Posters)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 10, 2025, 10:41 AM IST

Updated : Jan 10, 2025, 11:17 AM IST

சென்னை: ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (10ஆம் தேதி) வெளியாகியுள்ளது.

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கரோனா காலகட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ் இந்த கதையை தனக்கு சொன்னதாகவும், தனக்கு இந்த கதை மாஸ் கமர்ஷியலாக பிடித்திருந்ததாகவும் ஷங்கர் கூறியுள்ளார். மேலும் ஷங்கர் ’கேம் சேஞ்சர்’ படத்தில் தனது பாணியில் பாடல்களை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

அதுகுறித்து கேம் சேஞ்சர் படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ’ஜருகண்டி’ பாடல் பிரமாண்டமாக உள்ளது எனவும், ஆடியன்ஸ் கொடுக்கும் பணம் அந்த பாடலுக்கே முடிந்துவிடும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் தனியார் பக்கம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், ராம் சரண் நடிப்பு இப்படத்தின் முதுகெலும்பாக உள்ளது, அதுவும் ராம்சரண் மற்றும் அஞ்சலி கேரக்டர்களில் வாழ்ந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

அதேபோல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பும், தமனின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்ப்பதாக விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக அமையும். அதேபோல் மற்றொரு விமர்சனத்தில், ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் சுமார் என கூறப்பட்டுள்ளது. ராம் சரண் அறிமுக காட்சி, பாடல் காட்சிகள், தமன் பின்னணி இசை, இடைவேளை காட்சி மாஸாக இருந்ததாகவும், படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் ஷங்கரின் திரைக்கதை நன்றாக இருந்ததாகவும் விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்து ஷங்கரின் கம்பேக் படமாக இருக்காது என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மனதை வருடும் இனிமையான குரல்... 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய இசை ஜாம்பவான் ஜெயச்சந்திரன்! - JAYACHANDRAN SONGS

மேலும் மற்றொரு விமர்சனத்தில் ராம் சரண் ’கேம் சேஞ்சர்’ படத்தை இரட்டை வேடத்தில் தனது நடிப்பின் மூலம் தாங்கி பிடிக்கிறார் எனவும், ஷங்கர் எப்போதும் போல தனது பிரமாண்ட காட்சியமைப்பு மூலம் வியக்க வைக்கிறார் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமனின் பின்னணி இசையும், மாஸ் காட்சிகளை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக சுமாரான படம் என கூறியுள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் இதுவரை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Last Updated : Jan 10, 2025, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details