சென்னை: சென்னை அண்ணா நகரில் தனியார் ஊடக நிறுவன அலுவலக திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர்கள் அமீர், தம்பி ராமையா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஜூன் 4ஆம் தேதி ஆட்சி அமைந்தவுடன் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என்று பிரதமர் மோடி கூறியது குறித்த கேள்விக்கு, மோடி தான் முதலில் சிறை செல்லுவார். தேர்தல் பத்திரத்தில் ரூ.6,600 கோடிக்கு மேலாக பணம் பெற்றுள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனை வழியாகவும் பணம் வாங்கி உள்ளனர். தமிழ்நாட்டு மக்களை மோடி எந்த அளவுக்கு மதித்தார் என்பது தெரியாதா? பேரிடர் காலங்களில் மோடி அறிக்கைக் கூட விடவில்லை, ஆறுதலும் கூறவில்லை. அவமதிக்கிறார்கள் என்றால் என்ன செய்ய வேண்டும், எல்லாரும் வரும்போது காலில் விழுந்து கும்பிட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
60 ஆண்டு 70 ஆண்டு காலம் வாழ்ந்து மின் இணைப்பு, குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு உள்ளது; சாலை போட்டுள்ளார்கள், வீட்டு வரி வாங்கி உள்ளார்கள். 60 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஆக்கிரமிப்பு என்று தெரிகிறதா? அரசு ஆக்கிரமித்தவை பற்றி கூறவா? வள்ளுவர் கோட்டமே ஏரிகள் உள்ள இடம்தான். திடீரென்று ஆக்கிரமிப்பு என்று சொல்லி அப்புறப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.