தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"சீமான் கட்சியில் இருப்பவர்கள்தான் விஜய் கட்சிக்கு செல்வார்கள்".. எஸ்.வி.சேகர் கணிப்பு! - SV SEKAR

"விஜய் கட்சிக்கு யாராவது செல்வார்கள் என்றால் அது சீமான் கட்சியில் இருந்து தான்" என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் எஸ்.வி.சேகர்
விஜய் மற்றும் எஸ்.வி.சேகர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 6:07 PM IST

சென்னை:நடிகர் எஸ்.வி சேகர் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,"தென்னிந்திய திரைப்பட டப்பிங் சங்கம் 1981 பிறகு தொடங்கப்பட்டு, ராதாரவி தலைமையில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்போது என்ன பிரச்சனை என்றால் ஆரம்பத்தில் அது ஒரு டப்பிங் சங்கம் என்றனர். பின்னர் டப்பிங் மற்றும் நடிகர்கள் சங்கம் என்று மாற்றினார்கள், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் மாற்றி கொண்டு வருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் 'வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியன்' என்று தொடங்கினோம். இது லேபர் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் ராதாரவிக்கு இதற்கு ஒத்துவரவில்லை. நாங்கள் மற்ற யூனியன்களில் உறுப்பினராக இருப்பது லேபர் கமிஷன் அலுவலகத்திற்கு மட்டும்தான் தெரியும். நான் 1984 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறேன். இப்போது ஒரு சட்டம் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த சொல்கிறார்கள்.

எஸ்.வி.சேகர் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

டப்பிங் யூனியன் கட்டிடம் 2 கோடிக்கு மேல் கட்டப்பட்டது. அது முறையாக இல்லை நீதிமன்றம் அந்த கட்டிடத்தை இடிக்க சொல்லியது. ஆனால் திமுக அரசுதான் இதை இடிக்க சொன்னதாக ராதாரவி பரப்புரை செய்து வருகிறார். காரணம் பாஜகவில் இருப்பதால் இதை அரசியலாக்க பார்க்கிறார்.

அரசாங்கத்தின் உதவி இருந்தால் தான் எந்த துறையும் முன்னேறும். ஆனால் ராதாரவியின் தன் நோக்கத்திற்காக, அரசு எதிர்த்து பேசுவது பல தொழிலாளர்களின் நலனை பாதிக்கும். நான் 11 யூனியங்களில் மெம்பராக உள்ளேன் ராதாரவி 7 முதல் 8 யூனியன்களில் மெம்பராக உள்ளார்.
எந்த யூனியனில் இருக்க வேண்டும் என்பது மனித உரிமை அதை தடுக்க முடியாது. யாருடைய தொழில் வாய்ப்பையும் முயற்சியையும் அவர்கள் பறிக்கக்கூடாது ஆனால் அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:விஜயுடன் கூட்டணியா? விளக்கம் அளித்த திருமாவளவன்!

தமிழ்நாட்டில் 25 ஆண்டுகள் ஆனாலும் பாஜக ஆட்சிக்கு வரவே முடியாது. 2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். விஜய் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. ஆனால் கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக vs அதிமுக மட்டும் தான்.

தாக்கம் என்பது வேறு ஆட்சி பிடிப்பது என்பது வேறு. தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள் வரை உள்ளது. அந்த நாட்கள் அவரது செயல்தான் விஜயின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். விஜய், விஜய் என்று யார் பேசுகிறார்களோ அவர்கள்தான் உண்மையில் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் என்றார். விஜய் கட்சிக்கு யாராவது செல்வார்கள் என்றால் சீமான் கட்சியிலிருந்து தான் செல்வார்கள்.

ஸ்டாலின் இப்போது முதலமைச்சராக இருக்கிறார் என்றால் மூன்று முறை தமிழக முழுவதும் சுற்றி இருக்கிறார். ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. பிராமணர்களின் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள் தினசரி கூலி வேலை, கட்டிட வேலை புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள்.

பொதுவெளியில் பேசும் பொழுது என்ன பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்காதது.மேலும் 'பிராமணர் நல வாரியம்' அமைப்போம் என்று திமுக அறிவித்தால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வோம். ஆனால் எந்த கட்சியிலும் சேர மாட்டேன், எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு சார்பாகப் பிரச்சாரம் செய்வேன்" என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details