தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சத்யராஜின் MY Perfect Husband வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்! - MY Perfect Husband series trailer - MY PERFECT HUSBAND SERIES TRAILER

MY Perfect Husband series: இயக்குநர் தாமிரா இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ள மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

MY Perfect Husband posters
MY Perfect Husband posters (Credits - disney plus hotstar page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 8:22 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் தற்போது இணைய தொடரிலும் களமிறங்கியுள்ளார். இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' ( MY Perfect Husband) சீரிஸின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸ் வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள இந்த சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை பார்த்தசாரதி கையாண்டுள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார்.

சத்யராஜுடன் நடிகைகள் சீதா மற்றும் ரேகா ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸிற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மேலும், இந்த சீரிஸில் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் வெளியான சட்னி சாம்பார் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது மீண்டும் ஒரு வித்தியாசமான வெப் சீரிஸ் வருகிற 16ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ற ஆள் நான் கிடையாது" - சிவகார்த்திகேயன் சர்ச்சை பேச்சு! - sivakarthikeyan

ABOUT THE AUTHOR

...view details