சென்னை:தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமம் ராகவம்'. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சமுத்திரக்கனி, இயக்குநர் பாலா, பாண்டியராஜன், சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் நடிகர் சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடிக்குழு படத்தில் எனது புரோட்டா காமெடியை தெலுங்கில் செய்தவர் தன்ராஜ். ஒரு காமெடி நடிகர் இயக்குநராக மாறியுள்ளார். அப்பா பையன் எமோஷ்னலை சரியாக செய்துவிட்டால் அப்படம் தோற்காது. இப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். படம் எடுப்பது பெரிய விஷயமில்லை.
அதனை மக்களிடையே கொண்டு செல்வதுதான் மிகப்பெரிய கடினமாக உள்ளது. சமுத்திரக்கனி எனக்கு ஹீரோ மாதிரி. அவரது உடல்மொழியை நான் நிறைய படங்களில் பயன்படுத்தி உள்ளேன்” என்றார். பின்னர், சமுத்திரக்கனி பேசுகையில், “மிகவும் நெகிழ்வான தருணம். அப்பா பற்றி பேசும் போது தடுமாறுகிறது. ஒவ்வொரு அப்பாவும் சகாப்தம். பத்து படம் நடித்திருந்தாலும் இது வேறு கதை. புரிந்து கொள்ள முடியாத சொந்தம் அப்பா மகன் உறவு. இங்கு சரிசெய்யப்பட வேண்டியது அப்பாக்கள் தான்.