சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவருக்கும், பாடகி சைந்தவிக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பாக, தாங்கள் சுமூகமாக பிரிவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து தங்களின் தனிப்பட்ட வாழ்வை குறித்து பல யூடியூப் சேனல்களில் வதந்திகள் பரப்பி வருவதாகவும், பல கதைகள் புனையப்பட்டுள்ளதாகவும் சைந்தவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் தனியுரிமை கோரிய பிறகு, ஏராளமான யூடியூப் வீடியோக்கள் தாங்கள் பெற்ற செய்திகளைப் பற்றிய கதைகளை புனையப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
எங்கள் விவாகரத்து எந்தவொரு வெளிப்புற சக்தியினாலும் ஏற்படவில்லை. மேலும் ஒருவரின் குணாதிசயத்தை ஆதாரமற்ற முறையில் தோராயமாக படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரமாக எடுத்தோம். ஜி.வி.பிரகாஷும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். அந்த நட்பைப் பேணி முன்னேறிச் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சைந்தவியின் இந்த பதிவை சுட்டிக்காட்டிய ஜிவி பிரகாஷ் குமார், “தங்கள் சொந்த அனுமானங்களின் அடிப்படை உண்மை இல்லாமல் பல கதைகளை எழுதும் சேனல்களுக்காக இந்த பதிவு. மேலும், சிலர் தங்கள் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் மக்களை படுகொலை செய்வதை ரசிக்கிறார்கள். இந்த கடினமான காலங்களில் எங்களுடன் நிற்கும் மீதமுள்ள உங்களின் ஆதரவுக்கு நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:“முதலில் தனுஷ்.. இப்போது ஜி.வி...” கே.ராஜன் வைத்த முக்கிய வேண்டுகோள்! - K Rajan About Film Stars Divorce