சென்னை: அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில் உருவான லைட் ஹார்ட் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் 'சபா நாயகன்'.
உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய C.S. கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். Clear Water Films Inc சார்பில் அரவிந்த் ஜெயபாலன், icinema சார்பில் ஐயப்பன் ஞானவேல் & Captain Mega Entertainment சார்பில், கேப்டன் மேகவாணன், இசைவாணன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படம் காதல் நிறைந்த ரொமாண்டிக் படம். இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வரும் காதல்கள் பற்றி நகைச்சுவையாக எடுக்கப்பட்ட படம் தான் சபாநாயகன்.
ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, கல்லூரிக்கு பின்னால் உள்ள வாழ்க்கை என மூன்று காலக்கட்டத்தில் அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் கலக்கலான காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது சபாநாயகன் படம்.
இந்த படத்தில் மூன்று காலக்கட்டத்தில் விதவிதமான தோற்றங்களில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அருண் குமார் ஜெய்சீலன், ஶ்ரீராம் நண்பர்களாக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கேயும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க தவறியவர்கள் ஹாஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசித்து தங்களது பழைய காதலை நினைத்து உருகி வருகின்றனர். போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றியை சபா நாயகன் படம் அசோக் செல்வனுக்கு கொடுத்துள்ளது எனலாம்.
இதையும் படிங்க:சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு திடீர் சிக்கல்!