டோக்கியோ: தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களையே வைத்துள்ளார். ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற்ற க்ரஞ்சிரோல் அனிமே விருதுகளில் ரஷ்மிகா மந்தனா இன்று கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் இந்த விருது விழாவில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார்.
புஷ்பா படத்தின் மூலம் ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ராஷ்மிகா மந்தனாவை அங்குள்ள ரசிகர்கள் வரவேற்று வாழ்த்தியுள்ளனர். மேலும், சிலர் ராஷ்மிகாவுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். அவர்களது அன்பிற்கு ராஷ்மிகா தனது மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா பாகம் 1 கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் 2ஆம் பாகம் புஷ்பா தீ ரூல் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் 2024 சுகந்திர தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புஷ்பா 2 தீ ரூல் திரைப்படத்தை குறித்து பிங்க்வில்லா என்ற சேனலில் நடிகை ராஷ்மிகா மந்தனா சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். "நீண்ட பயணத்திற்குப் பிறகு வீடு திரும்புவது போல் இருந்தது. உண்மையில் ஒரு படத்தை முடித்த பிறகு. படக்குழுவினருடன் நீங்கள் இணைந்திருப்பீர்கள். புஷ்பா 2 தீ ரூல் திரைப்படம் முழு மசாலா கலந்த படமாக ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைந்தது 'பார்டி டைம்' போல் இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சர்ச்சையில் சிக்கிய வி3 யூடியூப் சேனல் உரிமையாளர்.. நெல்லையைச் சேர்ந்த விஜயராகவனின் பின்னணி என்ன?