சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று அவரது அடுத்த பட அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் டிசம்பர் முதல் வாரத்திலிருந்தே ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். அதுவும் இது ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 50வது ஆண்டுகள் என்பதால் இன்னும் கொண்டாட்டங்கள் ஸ்பெஷலாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வெளியானது முதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனக்ராஜ் கூலி திரைப்படம் ’LCU’ யுனிவர்சில் இல்லாமல் தனிப்படமாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று செகண்ட் லுக் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் ’ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்தது.