தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'Hunter varaar'...'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! - vettaiyan trailer date - VETTAIYAN TRAILER DATE

Vettaiyan trailer date: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.

வேட்டையன் போஸ்டர்
வேட்டையன் போஸ்டர் (Credits - @LycaProductions X account)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 4:59 PM IST

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் 'மனசிலாயோ' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலை சமூக வலைதளத்தில் பலர் ரீல்ஸாக வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து வெளியான hunter varaar பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசரின் மூலம் ரஜினிகாந்தின் கமர்ஷியலை தாண்டி இது டி.ஜே.ஞானவேல் படமாக இருக்கும் என தெரிந்தது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காஎதி ஜெயந்தியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐடி வேலை முதல் சினிமா இயக்கம் வரை... தமிழ் சினிமாவில் வரலாறு படைத்துள்ள முதல் திருநங்கை இயக்குநர்! - transgender samyuktha vijayan

வேட்டையன் படக்குழு ப்ரமோஷனில் இப்படத்தில் ரசிகர்கள் வித்தியாசமான ரஜினியை காணலாம் என கூறி வருகின்றனர். மேலும் படத்தில் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் நேரடியாக மோதிக்கொள்ளும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கும் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் வேட்டையன் பட டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details