தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“எங்களின் நட்பு உணர்ச்சிகரமானது” - ஆர்.எம்.வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி! - Rajinikanth about RM Veerappan - RAJINIKANTH ABOUT RM VEERAPPAN

RM Veerappan: எம்ஜிஆர் உடன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆர்.எம்.வீரப்பனுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி
ஆர்.எம்.வீரப்பனுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 7:31 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் (98) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடிருந்தார். இந்நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆர்.எம்.வீரப்பன் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை ஆர்.எம்.வீரப்பன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முழு வாழ்க்கை வாழ்ந்து நம்மை விட்டு சகோதரர் ஆர்எம் வீரப்பன் பிரிந்தது வருத்தம் அளிக்கிறது. எம்ஜிஆர் உடன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி பேரும், புகழோடும் இப்போதும் வலம் வருகின்றனர். ஆனால், ஆர்எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின் போனதே இல்லை. அண்ணா சொன்னது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர் என்றார்.

என்னுடைய நட்பும், அவருடைய நட்பும் ஆழமானது, மிகவும் உணர்ச்சிகரமானது, மிகவும் புனிதமானது. ஆர்.எம்.வீரப்பன் அவர்களை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது என்றார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் நன்றி" என்று பேசினார்.

இதையும் படிங்க:ஆர்.எம்.வீரப்பன் மறைவு; முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - RM Veerappan Passed Away

ABOUT THE AUTHOR

...view details