சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த வாழை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் சிறுவர்கள் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கின்றனர்.
அங்கு, முதலாளியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது தான் இப்படத்தின் மையக்கதையாகும். இப்படம் வெளியானது முதல் தற்போது வரை சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தை நடிகர் ரஜினி பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்.