தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் தலைவரானார் ராதாரவி.. தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் முடிவு வெளியானது! - Radha Ravi dubbing union

Radha Ravi: தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 2024 - 2026ஆம் ஆண்டுக்கான தேர்தலில் 662 வாக்குகள் பெற்று ராதாரவி மீண்டும் தலைவராகியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 10:25 PM IST

சென்னை: தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு, 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் இச்சங்கத்தின் 23 பதவிகளுக்கு இன்றைய தினம் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர்கள் போஸ் வெங்கட், நாசர், அம்பிகா, விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவிட்டனர்.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தமுள்ள 1,465 வாக்குகளில் 1,017 வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, ராதாரவி 662 வாக்குகளும், ராஜேந்திரன் - 349 மற்றும் சற்குணராஜ் 36 வாக்குகளையும் பெற்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் 2024 - 2026; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

ABOUT THE AUTHOR

...view details