தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இனிமேல் ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஓடும் 'புஷ்பா 2' - ஜனவரி 11 இல் இருந்து புதிய மாற்றம்! - ALLU ARJUN PUSHPA 2

Pushpa 2 Reloaded Version: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா 2’ திரைப்படத்தின் ரீலோடட் வெர்ஷன் வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

புஷ்பா 2 போஸ்டர்
புஷ்பா 2 போஸ்டர் (Credits: Mythri Movie Makers X Page)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 7:55 PM IST

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ’புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்ததுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ’புஷ்பா’ முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து ’புஷ்பா’ இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போதிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.

’புஷ்பா 2’வெளியான நாளிலிருந்து இப்போது வரை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் வசூல் இதற்கு முன் வெளியான பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. தென்னிந்தியாவை விட ’புஷ்பா 2’ வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு மொழியை விட புஷ்பா 2 திரைப்படம் ஹிந்தி மொழியில் அதிக வசூலை பெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.1831 கோடியை வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக தங்களது X பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய ரீலோடட் வெர்ஷன் வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 வெளிவந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் அதனுடைய ஓடிடி வெளியீடு எப்போது என தெரிவிக்கப்படாத நிலையில் திரைப்படத்தின் நேரம் நீட்டிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கார் பந்தய பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய அஜித்.. துபாயில் அதிர்ச்சி சம்பவம்

மேலும் பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கில் பல்வேறு புதுபடங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பண்டிகைக்கு வரும் புதுபடங்களைவிட அதிகமாக பார்வையாளர்களை கவர இந்த 20 நிமிடங்கள் சேர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம். முன்னதாக இந்தப் படத்தின் நீளம் 3.20 மணிநேரம் என இருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு, படத்தின் நீளம் ஏறக்குறைய நான்கு மணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details