சென்னை: அறிமுக நாயகன் தருண் - அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் "குற்றம் புதிது" படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கின்றனர்,
தமிழ் சினிமாவில் தரமான சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவது குறைவாகவே காணப்படுகிறது. அப்படி படங்கள் வந்தாலும் திரையரங்குகள் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனாலும், சினிமா மேல் உள்ள காதலால் சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.
அப்படி அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த குற்றம் புதிது படத்தில், காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார் மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கின்றனர்.