தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அரசியலில் இருந்து சினிமாத்துறை... தயாரிப்பாளரான பிரபல அரசியல் தலைவர் மகள்! - ANBUMANI DAUGHTER SANGAMITHRA

Anbumani Daughter sangamithra: இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ள ‘அலங்கு’ திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார்.

அலங்கு திரைப்படத்தை தயாரித்துள்ள சங்கமித்ரா அன்புமணி
அலங்கு திரைப்படத்தை தயாரித்துள்ள சங்கமித்ரா அன்புமணி (Credits - @SangamAnbu X account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 18, 2024, 2:35 PM IST

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அன்புமணி சினிமாத்திறையில் களமிறங்கியுள்ளார். ’அலங்கு’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இதற்கு முன்னதாக உறுமீன், பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் அலங்கு திரைப்படத்தை சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். சங்கமித்ரா தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட தனது தாயார் சௌமியா அன்புமணிக்காக சங்கமித்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ராஜதுரை பார்த்திருந்தா இன்னும் நல்லா எடுத்திருப்பேன்"... 'கோட்' கதை விவகாரம் குறித்து பேசிய வெங்கட் பிரபு!

அதேபோல் திரைத்துறையை சார்ந்த இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கையை இயக்குநர் சேரன் படமாக எடுக்கப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details