சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் துஷாரா விஜயன், ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த் நேற்று மாலை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத்தில் சாமி தரிசனம் செய்தார். ரஜினிகாந்த் தங்கள் பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள் அவரைக் காண ஒன்று கூடினர். பின்னர் அவருடன் பொதுமக்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.