ETV Bharat / state

அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது மக்களிடம் ஆட்சிக்கான ஆதரவை அதிகரிக்கிறது...மு.க.ஸ்டாலின் பெருமிதம்! - GOVERNOR AGAINST THE GOVERNMENT

ஆளுநர் எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார். தொடர்ந்து ஆளுநர் இதை செய்ய வேண்டும். ஆளுநர் இவ்வாறு செயல்பட செயல்பட எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வேகம் வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை பார்வையிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை பார்வையிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Image credits-TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 12:41 PM IST

சென்னை: "ஆளுநர் எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் அது எங்களுக்கு நல்லது தான் தொடர்ந்து ஆளுநர் இதை செய்ய வேண்டும் ஆளுநர் இவ்வாறு செயல்பட செயல்பட எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வேகம் வருகிறது,"என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடசென்னை வளர்ந்த சென்னை ஆகும்: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடி மதிப்பில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார். கணேசபுரம் மேம்பால பணி, 776 புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, தண்டையார்பேட்டை பேருந்து நிலைய பணி பார்வையிட்டு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி (Image credits-TN DIPR)

இதையும் படிங்க: தங்கம் விலை 10 நாட்களில் சவரனுக்கு ரூ.2,280 வரை உயர்வு.. அதிகரிப்புக்கு காரணம் என்ன?

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை நான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன் துணை முதலமைச்சரும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளேன். வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டு காலத்திற்குள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆளுநரின் செயல் ஆட்சிக்கு சிறப்பு: ஆளுநர் எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் அது எங்களுக்கு நல்லது தான் தொடர்ந்து ஆளுநர் இதை செய்ய வேண்டும் ஆளுநர் இவ்வாறு செயல்பட செயல்பட எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வேகம் வருகிறது. ஆளுநரின் செயல்பாடு திமுக ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கிறது.

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே அது தொடர்பாக கருத்து சொல்ல இயலாது. பெரியார் பற்றி மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் தான் எங்களுடைய தலைவர். தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். பெரியார் குறித்த விமர்சனத்தை பொருட்படுத்த தயாராக இல்லை.

எதிர்க் கட்சிகளின் அரசியல்: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதாக வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அங்கொன்று இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை பெரிதாக்கி பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன,"என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.