சென்னை: கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்த 'குட்நைட்' படத்தை தயாரித்த மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் 'லவ்வர்' திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த வரிசையில் தற்போது, அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரிப்பதாக, அர்ஜுன் தாஸின் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மேலும், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நான்னா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டு, டைட்டில் டீசர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் வரும் வசனமான "லவ் மேரேஜ்? (ஆர்) அரேஞ்ச் மேரேஜ்?" இளைய தலைமுறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த டைட்டில் டீசரை பார்க்கையில் காதல் ஆசை இல்லாத இருக்கமான மனநிலை உடைய ஒரு ஆணுக்கும், அவனை காதலிக்கும் பெண்ணுக்கும் இடையிலான நிகழ்வுகளை மையப்படுத்தியதா இந்த திரைக்கதை அமைந்திருக்கும் என நெட்டிசன்கள் கருது கூறுகின்றனர். மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரஜினியின் வேட்டையன் உடன் மோதும் ஜீவாவின் 'பிளாக்'
இந்த நிலையில், தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் - இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்- அதிதி ஷங்கர்- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்திற்கு திரையுலக பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்